மொழி : சீனமொழி.
இயற்றியவர் : சாங் சியாஒசியான்
ஆங்கில மொழிபெயர்ப்பு : சிமான் பாட்டன்
தமிழ் மொழிபெயர்ப்பு : சித்தார்த்.
கடவுள்
————-
எனது செவி விளிம்பின் அப்பாலிருந்து,
ஓர் மெல்லிய குரலின் அழைப்பு.
எனது பார்வை தொடாஇடத்திலிருந்து
ஒரு ஜோடி கண்களின் பார்வை
எனது தொடுஉணர்விற்கு வெளியே இருந்து
ஓர் கரத்தின் தொடகை
எனது கற்பனை கூட தீண்டாத வெளியில்,
யாருக்கோ, நான் இல்லாததன் தனிமை.
– சாங் சியாஒசியான்
3 replies on “கடவுள் – ஓர் சீன கவிதை”
கடவுள் பற்றிய எனது கவிதை ஒன்று……
அது
—-
சிறு ஒளி
சிறு துகள் விளக்கம்
கால காலமான
காத்திருப்பு
வழி அளந்த
விசுபரூபம்
வரட்சி செழுமை
வாழ்க்கையாய்
பிரபஞ்சத்தின்
கொடியிடைத்
தொடர்பு
பொருள்
அறிந்த
அறியத் துடிக்கும்
எத்தனம்
அறிய முடியா
அயர்வு
மனித வாழ்வு
மண்டியிட்ட
கணங்கள்
வியாபிதமாய்
அறிந்தும்
அறியாமலும்….
-அன்புடன் இளந்திரையன்
Can I get a link to the original (in English)? Thx
அந்த கவிதையின் சுட்டி இதோ உள்ளது பாலா.
http://china.poetryinternational.org/cwolk/view/24932