ஆஸ்பத்திரி.
அறையில் அவன்.
ரண சிகிச்சை செய்து கிடத்தியிருந்தார்கள்.
நான்கு மணி நேரம் கழித்து அவன் தன்னருகில் யாரோ நிற்பதாக ஒரு போதும் தட்டிவிழித்துப் பார்த்தான்.
யாரும் இல்லை. மறுபடியும் தூங்கிவிட்டான்.
அவ்விருவரும் வெளியில் வந்தனர்.
முதல்வன் : ஏன்?
மற்றவன் : இன்னும் சமயம் ஆகவில்லை.
[ நகுலன் (ஞானரதம், அக்., 1972) ]
– சித்தார்த்