பிரிவுகள்
திரைப்படம்

Chaos Theory – இரு திரைப்படங்கள்

கேயாஸ் தியரி (chaos theory – தமிழில் என்ன?) புனைவாளர்களுக்கு அறிவியல்
துறை தந்த கொடை என்றே நினைக்கத்தோன்றுகிறது.

கேயாஸ் தியரி என்றால்? ஒரு மிகச்சிறிய நிகழ்வு, காரணம்-விளைவு (cause –
effect) சுழற்சியில் சிக்கி, காலப்போக்கில் மிகப் பெரிய மாற்றத்தை
உண்டாக்கும் சாத்தியக்கூறு உண்டு. இதை இப்படி விளக்குவார்கள் –

“அட்லாண்டிக் பெருங்கடலில் ஓர் வண்னத்துப்பூச்சியின் சிறகசைப்பில்
உண்டாகும் காற்று, காலப்போக்கில் பெசபிக் பெருங்கடலில் புயலாய்
மாறலாம்.”.

இதை வண்ணத்துப்பூச்சி விளைவு (butterfly effect) என்பர்.

இதையொட்டி எடுக்கப்பட்ட இரு படங்களை சமீபத்தில் கண்டேன். ஒன்று ஆங்கிலப்
படம். Butterfly effect என்று பெயர்.

ஒர் இளைஞனின் சிறுவயதில் பல துயரமான சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. (குற்ற
உணர்வினால் ஒரு நண்பன் நடைபிணமாகிறான், கொடூரமான தந்தையின் வளர்ப்பினால்
ஒரு நண்பன் sadistஆக மாறிவிடுகிறான், தோழி தற்கொலை செய்துகொள்கிறாள்).
ஒரு நாள், அவனால் அவனது வாழ்வின் முக்கிய கணங்களுக்கு பயணம் செய்ய
முடியும் என தெரிய வருகிறது. சிறுவயதில் அந்த பயங்கரங்கள் நிகழ்ந்த
அக்கணங்களுக்கு சென்று அதை நிகழாமல் தடுத்து விட்டால், பிறகு
எல்லாவற்றையும் சரியாக்கிவிடலாம் என எண்ணுகிறான். இங்கு தான் butterfly
effect வேலை செய்கிறது. அவன் செய்யும் ஒரு சிறு மாற்றம் கூட,
அந்நால்வரின் வாழ்வையே முற்றிலும் மாற்றி வேறோர் பயங்கரத்திற்கு
வித்திட்டு விடுகிறது. ஒவ்வொரு முறையும் இதுவே நிகழ்கிறது. கடைசியில்
எப்படி இச்சுழற்சியில் இருந்து மீள்கிறான் என்பதனை காலத்தின் முன்னும்
பின்னும் ஊஞ்சல் ஆடுவதை போன்றதொரு யுத்தியை கொண்டு
சொல்லியிருக்கிறார்கள்.

இப்படத்தை விளக்குவது கொஞ்சம் கடினம். அதுவும் எனக்கு கோர்வையாய் (அல்லது
கோவையாய் – சரிதானே இரவா? 😉 ) வேறு எழுத வராது. அதனால் நான் குழப்பியதை
எல்லாம் மறந்துவிட்டு படத்தை டிவிடியிலோ வேறு எப்படியோ
பார்த்துவிடுங்கள்.

இப்படத்தை பற்றிய மேலதிக விவரங்களுக்கு:

http://www.imdb.com/title/tt0289879/

இதை போன்ற இன்னொரு படம் “ஓர் வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பு” (The
Beating of a Butterfly’s Wings). இது ஒரு ப்ரென்ச் மொழி படம். ஆங்கில
உலகில் happenstance என்ற பெயரில் திரையிடப்பட்டது.

பல்பொருள் அங்காடி பணிப்பெண். சகாரா பாலைவனத்தின் மணல். மனைவிக்கும்
கள்ளக்காதலிக்கும் இடையே சிக்கித்தவிக்கும் ஒருவன். பொய்சொல்வதில்
வல்லவன் ஒருவன். அல்ஜீரிய எழுத்தாளன். பாரிஸ் நகரத்து வண்டு.
முதிர்கண்ணி. ஓர் கூழாங்கல். முதலுதவி நிபுணன்.  சாக்லேட்.

சம்பந்தமே இல்லாத இவர்களின்/இவற்றின் ஒரு நாள் நிகழ்வை பற்றிய படம் இது.
ஒருவரின் ஓர் சிறு செய்கை மற்றவரின் வாழ்வினை முற்றிலுமாக
மாற்றிவிடுகிறது. கொஞ்சம் அசந்தாலும் குழப்பிவிட்டு ஓடிவிடக்கூடிய
கருத்தாக்கம் இது. தேர்ந்த திரைக்கதையினை கொண்டு இதனை நன்றாகவே
வடித்துள்ளார் இயக்குனர்.

இப்படத்தை பற்றிய விவரங்கள் இங்கே :

http://www.imdb.com/title/tt0243135/

Butterfly effect, காலத்தின் மீதான கேயாஸ் தத்துவ விளைவுகளை பற்றி
பேசுகிறது. Happenstance சம்மந்தமில்லாத 12 மனிதர்களின் நிகழ்வுகளின்
விளைவை பற்றி பேசுகிறது.

– சித்தார்த்

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

One reply on “Chaos Theory – இரு திரைப்படங்கள்”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s