பிரிவுகள்
திரைப்படம்

பெருமழக்காலம்

       எனக்கு பிடித்த இயக்குனர்கள் வரிசையில் கமல் நிச்சயம் உண்டு. தமிழ்
நடிகர் கமல்ஹாசன் அல்ல. மலையாள திரைப்பட இயக்குனர் கமல். இவரும் சில
விஷயங்களில் நமது கமலை போல தான். பொழுதுப்போக்கு படம் எடுப்பார். திடீரென
ஓர் மிக அற்புதமான ஓர் படத்தை கொடுத்துவிட்டு மறுபடியும் பொழுதுபோக்கு
படங்களுக்கு சென்று விடுவார்.  ஆயாள் கத எழுதுகயானு, கிருஷ்ணகுடியில் ஒரு
ப்ரணயகாலத்து,  மதுர நொம்பரக் காட்டு,  மேகமல்ஹார், ராப்பகல்,
கிராமஃபோன், நிறம்,பெருமழக்காலம் இவரது சில நல்ல படங்கள்.

பெருமழக்காலம் படத்தை சமீபத்தில் பார்தேன் (2-3 மாதங்களுக்கு முன்).
ரகுராம ஐயரும் அக்பரும் சௌதி அரேபியாவில் வேலைசெய்யும் மலையாளிகள். ஏதோ
ஓர் சின்ன சண்டை முற்றி அக்பர் ரகுராமை தாக்க அவர் இறந்துவிடுகிறார்.
ஷரியா சட்டப்படி அக்பரை சிறையில் அடைத்து மரண தண்டனை அறிவித்து
விடுகின்றனர்.

ஆனால் கதை இவர்களை பற்றியது அல்ல. இவர்கள் படத்தில் காட்டப்படுவதும்
இல்லை (அக்பராக நடிக்கும் திலீப் மட்டும் கடைசி 5 நிமிடங்களுக்கு
வருவார்). இந்நிகழ்வுகள் யாவும் நமக்கு செவிவழிச்செய்திகளாகவே
சொல்லப்படுகின்றன. கதை, அக்பரின் மனைவியான ரசியா மற்றும் ரகுராம ஐயரின்
மனைவியான கங்காவை பற்றியது. இறந்துபோன ரகுராமின் மனைவியான கங்கா
விருப்பம் தெரிவித்தால் அக்பரின் மரணதண்டனை ரத்து செய்யப்படும் என
ரசியாவிற்கு தெரியவர, அவர் எவ்வாறு கங்காவிடமும் அவரது
குடும்பத்தாரிடமும் தனது கணவனின் உயிருக்காக போராடுகிறார் என்பது தான்
கதை.

ரசியாவாக மீரா ஜாஸ்மின் மனதை அள்ளுகிறார். கணவன் இறப்பதும் வாழ்வதும்
அவர் கையில் தான் உள்ளது என அறிந்தபின் அவர் செயல்களில் வரும் ஓர்
உத்வேகம் அவரது நடிப்புக்கு சான்றிதழ். கங்காவாக நடித்த காவ்யா மாதவன்
எனக்கு மிகவும் பிடித்த மலையாள நடிகைகளில் ஒருவர் (மஞ்சு வாரியர்,
சம்புக்தா வர்மா, மீரா ஜாஸ்மின் மற்ற மூவர்). கணவனை இழந்த சோகம், கணவனின்
மிக இருக்கமான மத கோட்பாடுகளை கொண்ட குடும்பத்தின் ஆளுமைக்குட்படுதல்,
இதனையும் மீறி ரசியாவின் மீது வரும் இரக்கம் என பன்முக தன்மை கொண்ட
பாத்திரப்படைப்பு கங்காவுடையது. அதை காவ்யா மிக அழகாகவே செய்துள்ளார்.
குறிப்பிடப்படவேண்டிய இன்னொரு நடிகர் பிஜூ மேனன். அக்பரின் நண்பரான ஜான்
ஆப்ரகாம் பாத்திரத்தில் நடித்துள்ளார். தேர்ந்த நடிப்பு.

இரு கதாநாயகிகளை முன்வைத்து முழு படத்தையும் நகர்த்தி இருப்பது, தெளிவான
திரைக்கதை, ஜெயச்சந்திரனின் மனதை பிசையும் இசை, மதம் சார்ந்த
அடக்குமுறையை அலசியவிதம், கமலின் இயக்கத்தில் இருக்கும் அழகியல் எல்லாம்
சேர்ந்து இப்படத்தை சமீபகால மலையாளப்படங்களில் முக்கியமான ஒரு படமாக
ஆக்குகிறது.

படம்: பெருமழக் காலம் (அடை மழை காலம்)
மொழி: மலையாளம்
இயக்குனர்: கமல்
நடிப்பு: மீரா ஜாஸ்மின், காவ்யா மாதவன், பிஜு மேனன், திலீப், வினீத்
ஆண்டு: 2004

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

One reply on “பெருமழக்காலம்”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s