“என் அனுபவங்கள் எனக்கு மட்டும் உரியவை. என் குழந்தை எனக்கு அளிக்கும் பரவசம் தந்தையாக இருப்பதனாலேயே நான் அடைவது. அது பிறருக்கு கிடைக்காமல் போகக்கூடும். ஆனால் அவ்வனுபவத்தை நான் மானுடப் பொது அனுபவத்தின் தளம் நோக்கி நீட்டினால் எல்லா அனுபவங்களும் எல்லோருக்கும் உரியனவாகி விடுகின்றன”
– ஜெயமோகன் (வாழ்விலே ஒரு முறை, முன்னுரை)
நான் பார்க்கும் திரைப்படமோ, படிக்கும் புத்தகமோ, சந்திக்கும் நபர்களோ எனக்கு தரும் அனுபவத்தின் நீட்சியாய் இப்பதிவுகள்.
8 replies on “அறிமுகம்”
சோதனை பின்னூட்டம்
குறிப்பிடத்தக்க திரைப்படங்களின் குறிப்பிட்ட இடங்களை குறிப்பிடத்தக்க வகையில் குறிக்கறீங்க. நன்றிகள் பல….
சித்தார்த்தின் எழுத்துப் பயணத்தில் இன்னொரு மைல்கல். வாழ்த்துக்கள்.
நன்றி சேது. 🙂
சித்தார்த், நீங்கள் எனது பதிவுகளுக்கான பின்னூட்டங்களை அளித்த வேளை உங்களிடமிருக்கும் பதிவுகளைக் காண நேர்ந்தது, பதிவுகளில் நல்ல நேர்த்தியும், விமர்சனங்களிள் முதிர்ச்சியும் இருக்கின்றது, வாழ்த்துக்கள்.
அன்பு சித்தார்த்,
சரியான ஆள் சரியான இடத்துக்கு (சற்றே காலதாமகமாவது:)வந்திருக்கின்றீர்கள். வருகைக்கு நன்றி.
அங்கிங்கெனாதபடி
அந்த சிட்டுக்குருவியை போலே…
பதிவின் வடிவமைப்பும், உங்கள் பதிவுகளும், எழுத்தும் மிகுந்த சந்தோசத்தில் திளைக்கவைக்கிறது. இதே உத்வேகத்துடன் தொடருங்கள். வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
நன்றி அன்பு. 🙂
இன்னும் எத்தனை நாள் இதே உத்வேகத்தோடு எழுதுவேன் என தெரியவில்லை. எனது முந்தய வலைப்பதிவுகளும் இப்படி வேகமாய் வளர்ந்து நின்று விட்டன. என்ன செய்ய…. திடீரென என்னுள் இருந்து அந்த சோம்பேரிப் பயல் வெளியே வந்துவிடுகிறான். 😀