அசாயலை அடைந்த பிள்ளையார் ;)

2009 ஆகஸ்ட் 24
by Siddharth

pillaiyaar

இந்த வருடமும்
சரஸ்வதி பூஜைக்கு
அம்மன்  முகம் செய்தேன்
முன்பு
தங்கச்சி சாயலில்
முகம் இருக்கும்
இடையில்
இவள் சாயலில் இருக்கிறது
என்றார்கள்
இந்த முறை
உறவின் அடையாளங்களில் இருந்து
கழன்று ஒரு முகத்துடன்
சரஸ்வதி உருவம் சிரித்தது.
அசாயலை
அடைவதற்கு
ஆகிவிட்டது இத்தனை காலம்.

- கல்யாண்ஜி

(கவிதைக்கு மாடலாய் நிற்பது என் மனைவி நேற்று விநாயகர் சதுர்த்திக்கு வடித்த மஞ்சள் பிள்ளையார். பிள்ளையார் பிடிக்கப்போய் பிள்ளையாராகவே வந்திருக்கிறது. :)  அருகில் நிற்கும் எலியை எலி என்று கணித்து விட்டீர்கள் எனில், உங்கள் அவதானிப்பு மிக நுட்பமானது என்பதை ஒத்துக்கொள்கிறேன். ;)  )

9 பதில்கள் leave one →
  1. 2009 ஆகஸ்ட் 24
    vibagai permalink

    Romba nalla vanthirukku. Vazhthukkal ungal thunaiviyarukku.

  2. 2009 ஆகஸ்ட் 24
    ஆயில்யன் permalink

    பிள்ளையார் பிடிக்கப்போய் பிள்ளையாரே நல்ல அம்சமா வந்திருக்காரு ! :)

    பட் பயப்படாம எலி புடிக்க போனது, ரொம்ப தைரியம்தான் யக்கோவ் :) )

  3. 2009 ஆகஸ்ட் 24

    \\ அருகில் நிற்கும் எலியை எலி என்று கணித்து விட்டீர்கள் எனில், உங்கள் அவதானிப்பு மிக நுட்பமானது என்பதை ஒத்துக்கொள்கிறேன். )\\

    பிள்ளையாருக்கு இணையாக எலியை உருவாக்கிய அம்மணிக்கு ஒரு ஸ்பெசல் ஒ ;) )

    கவிதையும் அருமை ;)

  4. 2009 ஆகஸ்ட் 24

    நெசமாவே பிள்ளையார் போல செய்திருக்கும் காயத்ரிக்கு வாழ்த்துகள். எலி? கொஞ்சம் நவீன, கணினி எலி போல இருந்தாலும்… கவிதாயினி இல்லையா? கொஞ்சம் பூடகமாகவும் சொல்லணும்ல!

    அனுஜன்யா

  5. 2009 ஆகஸ்ட் 25

    superaa irukku. :-) akkadde sollidungga. ;-)

  6. 2009 ஆகஸ்ட் 25

    //பிள்ளையார் பிடிக்கப்போய் பிள்ளையாராகவே வந்திருக்கிறது. //

    ஆச்சர்யம்.. அதிசயம்.. ஆனால் உன்மை :) ))))

    //அருகில் நிற்கும் எலியை எலி என்று கணித்து விட்டீர்கள் எனில், //

    அவ்வ்வ்வ்வ்வ்.. நான் பிள்ளையாருக்கு வால் வைக்க முயற்சி செஞ்சிருக்காளோனு இல்ல தப்பா நினைச்சிட்டேன் ;) ))))

  7. 2009 ஆகஸ்ட் 25

    பிள்ளையாரை ஏற்கனவே பார்த்துட்டேன்.

    கவிதையோட பார்க்கும் போது களையாத் தான் இருக்காரு.

  8. 2009 ஆகஸ்ட் 25

    உங்க சாயல்ல இருக்கு :-)

    பாராட்டுகள்

  9. 2009 ஆகஸ்ட் 27
    ஜீவ்ஸ் permalink

    ஏம்ப்பா… அது எலியா இல்ல குட்டி டைனோசரா ? அவ்வளவு பெரிய வாலு… ஒருவேலை எங்க அக்கா தன்னோட வாலை எடுத்து இங்க ஒட்ட வச்சுட்டாங்களா ?

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS