நிதர்சனம் – ஓர் கவிதை
2006 ஜனவரி 8
நீண்ட நாட்களுக்கு பிறகு சென்ற வாரம் எழுதிய கவிதை.
நிதர்சனம்
———–
எம்பிக்குதித்து
உடலின் எல்லையில் மோதி
கீழ் விழுந்து
மீண்டும் முயன்று
மீண்டும் தோற்று
விழுப்புண்களுடன்
புவியீர்ப்பின் கோடையில்
வாடத்தொடங்கும்
பறவை முன்
குழந்தை மனம்
- சித்தார்த்